தமிழர் பகுதியில் பெண் பொலிஸ் உயரதிகாரி செய்த செயல் ; அதிரடி காட்டிய அதிகாரிகள்
இங்கினியாகல காவல் நிலையத்துக்கு பல்வேறு சேவைகள் ஊடாக வருமானமாகப் பெறப்பட்ட சுமார் 290,000 ரூபாய் பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில், அதே காவல் நிலையத்தில் கடமையாற்றிய பெண் பொலிஸ் சார்ஜண்ட் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பாறை பொலிஸ் விசேட குற்ற விசாரணைப் பிரிவினரால் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நிதி முறைக்கேடு
அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தினால் மேற்கொள்ளப்பட்ட உள்வாரி கணக்காய்வு பரிசோதனையின் போதே இந்த நிதி முறைக்கேடு கண்டறியப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கி அனுமதிப்பத்திரங்கள் வழங்குதல் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மூலம் பெறப்படும் வருமானப் பணத்தை, அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தின் உத்தியோகபூர்வ கணக்கில் முறையாக வைப்பிலிட வேண்டும்.
எனினும், சந்தேகநபரான பெண் பொலிஸ் சார்ஜண்ட் காவல் நிலையத்துக்குப் பெறப்பட்ட அந்த பணத்தைச் வைப்பிலிடாது தவறியுள்ளமை கணக்காய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளதாகக் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.