யாழில் மனைவியை கைவிட்டு லண்டனுக்கு சென்ற இஞ்சினியர்; 23 வருடங்களின் பின் மகளுக்காக வந்த அப்பா
யாழில் 23 வருடங்களுக்கு முன்னர் கைக்குழந்தையுடன் மனைவிமீது கொண்ட மனக்கசப்பால் அவர்களை விட்டு லண்டனுக்கு சென்ற இஞ்சினியர் தற்போது மகளுடன் சேர்ந்த சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது.
1990 ஆண்டு தனது மனைவி குழந்தைகளை கைவிட்டு சென்றவர் தற்போது மகளின் திருமணத்திற்காக நாடு திருப்புள்ளதாக கூறப்படுகின்றது. தென்னிலங்கை பல்கலைகழக நிகழ்வொன்றில் ஆரம்பமான இவர்களது நட்பு காதலாகி, திருமணமும் செய்துகொண்டுள்ளனர்.
மகளுக்காக வந்த தந்தை
எனினும் இருவருக்கு இடையில் ஏற்பட்ட மனக்கசப்பால் மனைவி மகளை பிரிந்து அவர் வெளிநாடு சென்று விட்டார். அதன் பின்னர் அவர் தனது குடும்பத்தினரை தொடர்பு கொள்ளவிலை என கூறப்படுகின்றது.
இந்நிலையில் மகள் வளர்ந்து தென்னிலங்கையில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக கடமையாற்றிவருவதாக கூறப்படுகின்றது.
தனது நண்பர்கள் மூலம் தந்தை இருப்பிடத்தை அறிந்து கொண்ட மகள், லண்டனில் மேற்படிப்புக்கா சென்ற தமது நண்பர்கள் ஊடாக தொடர்பினை ஏற்படுத்தியுள்ளார். தந்தையும் மகளுக்குமான பாசப் பிணைபால் தற்போது, மகளின் திருமணத்திற்காக அவர் நாடு திருப்பியுள்ளதாக கூறப்படுகின்றது.
மனைவி மகளை பிரிந்தபோதும், குறித்த இஞ்சினியர் வேறு திருமணம் செய்துகொள்ளவில்லையாம். இந்நிலையில் தாய் தந்தையை சேர்த்து வைக்க மகள் எடுத்த கடும் முயற்சி வெற்றியை கொடுத்துள்ளது.
அதேவேளை தென்னிலங்கை மருத்துவர் ஒருவரை இஞ்சினியரின் மகள் கரம்பிடிக்கவுள்ள நிலையில் , பிரிந்த குடும்பம் இத்தனை ஆண்டுகளின் பின்னர் இணையவுள்ளமை நெகிழ்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.