திடீரென ஏற்பட்ட தீ: 177 பயணிகளுடன் அவசர அவசரமாக நிறுத்தப்பட விமானம்
டெல்லியில் இருந்து பெங்களூர் புறப்பட்ட IndiGo பதிவு இலக்கம் 6E 2131 விமானம் ஓடு பாதையில் ஓடியபோது இன்ஜினில் தீப்பொறி ஏற்பட்டதையடுத்து அவசரமாக டெல்லி இந்திரா காந்தி விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டது.
இந்த சம்பவம் இன்றைய தினம் இரவு (28-10-2022) இடம்பெற்றுள்ளது.
விமானத்தின் இன்ஜினில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீப்பிடித்ததாக கூறிய விமான சேவை நிறுவனம் தீ கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவர்களுக்கு மாற்று விமானம் ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளது.
குறித்த விமானத்தில் 177 பயணிகள் 7 விமான பணியாளர்களும் பயணித்துள்ளனர்.
விமானத்தில் இருந்த பயணி ஒருவர் இயந்திரத்தில் ஏற்பட்ட தீயினை டுவிட்டரில் பதிவேற்றம் செய்துள்ளார்.