காலை வெறும் வயிற்றில் சுடச்சுட Tea குடிப்பதால் இவ்வளவு பிரச்னைகள் உண்டா ! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க
தினமும் காலை எழுந்தவுடன் வெறும் வயிற்றில் டீ குடிப்பவரா நீங்கள்? வெறும் வயிற்றில் டீ குடித்தவுடன் உடலில் என்னென்ன மாற்றங்கள் நிகழும்? இதுபற்றி மருத்துவர்கள் சொல்வதென்ன என விரிவாக பார்க்கலாம்
டீயில் உள்ள கஃபைன் மற்றும் டேனின்ஸ் (Tannins) ஆகியவை வயிற்றிலுள்ள மெல்லிய தசைகளில் எரிச்சலை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. இதனால் தலைச்சுற்றல், அசிடிட்டி, வயிறு சார்ந்த பிற பிரச்னைகள் போன்றவை ஏற்படக்கூடும்.

உணவின் செரிமானம்
உடலிலுள்ள அதிகப்படியான நீர் மற்றும் உப்புகளை (எலக்ட்ரோலைட்டுகள்) சிறுநீர் மூலமாக வெளியேற்றும் செயல்முறையில், தேநீரானது பிரச்னை ஏற்படுத்தக்கூடும். இதனால் நீரிழப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. ஏற்கெனவே தூங்கி எழும்போது நம் உடலில் நீரிழப்பு இருக்கும் என்பதால், இந்த டீ நிலைமையை இன்னும் மோசமாக்கும்.
அளவுக்கதிகமாக கஃபைன் சத்து உடலுக்கு கிடைக்கும்போது பதற்றம், மன அழுத்தம், சோர்வு, ஓய்வின்மை போன்றவை ஏற்படக்கூடும். மட்டுமன்றி வெறும் வயிற்றில் தேநீர் குடிக்கும்போது, வயிற்றிலுள்ள அமிலம் எளிதில் நீர்த்துப்போகும். இதனால் காலை உணவின் செரிமானம் மெதுவாகும். இரைப்பை அழற்சி போன்றவை ஏற்பட இது காரணமாகும். ஏற்கெனவே அசிடிட்டி இருப்பவர்களுக்கு, வயிறு வலியோ, அசௌகரியமோகூட ஏற்படக்கூடும்.

வெறும் வயிற்றில் தேநீர் குடிப்பதை போலவே, உணவுக்கு முன்னரோ பின்னரோ தேநீர் குடிப்பதும் ஆபத்தானதுதான். இது ஊட்டச்சத்து முறையாக உட்கிரகிக்கப்படுவதில் சிக்கலை ஏற்படுத்தும்.
குறிப்பாக தேநீரில் உள்ள அமிலமானது, உடலிலுள்ள புரதம் மற்றும் இரும்புச்சத்தை ஒன்றாக சேர்த்து, அவற்றை முறையாக உட்கிரகிக்கப்படாமல் போகச்செய்யும். இதனால் செரிமானக் கோளாறுகள் ஏற்படும். இதனால்தான் உணவுக்கு 20 முதல் 30 நிமிடங்களுக்கு முன்னரோ பின்னரோ தேநீர் அருந்த பரிந்துரைக்கப்படுகிறது.

அன்றாடம் காலையில் எழுந்தவுடன் தேநீர் அருந்தி பழக்கப்பட்டவர்கள், அதற்கு பதிலாக கஃபைன் இல்லாத தேநீரை அருந்தி வரலாம். உதாரணமாக மஞ்சள், இஞ்சி, இலவங்கப்பட்டை, மிளகுத்தூள் போன்றவை சேர்க்கப்பட்ட மூலிகை தேநீரை பால் சேர்க்காமல் இனிப்புக்கு தேன் சேர்த்து சாப்பிடலாம்.
இதேபோல காலையில் எலுமிச்சை சாறு / புதினா போன்றவை சேர்த்து வெதுவெதுப்பான நீரை அருந்துவது, செரிமானத்தை மேம்படுத்த உதவும். முடிந்தவரை வெறும் வயிற்றில் தேநீர் குடிக்க வேண்டாம். வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதே அதிக நன்மைகளை கொடுக்கும்.