மட்டக்களப்பு சிறைச்சாலையில் உயிரிழந்த இளைஞன் ; தாயார் வெளிப்படுத்திய தகவல்
எனது பிள்ளைக்கு நடந்தது போன்று வேறு பிள்ளைகளுக்கு நடக்கக் கூடாது என்று மட்டக்களப்பு சிறைச்சாலையில் தாக்குதலுக்குள்ளாகி உயிரிழந்த கைதியின் தாய் கோரிக்கை விடுத்துள்ளார்.
வீட்டிலிருந்து வெளியே சென்ற மகன் சைக்கிள் திருடிய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு பொலிஸ் காவலில் இருந்துள்ளார்.

நீதி கோரும் தாயார்
அவரைத் தாய் தொடர்ச்சியாகப் பார்வையிட்டு உணவு கொடுத்து வந்துள்ளார். நீதிமன்றிற்குச் கொண்டு செல்லும் வேளையில் உணர்வின்றி இருந்துள்ளார். அதன்பின்னர் தாயை அழைத்து உடை மாற்றி நீதிமன்றிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
நீதிமன்றின் விசாரணையின் பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
வீட்டிலிருந்து நடந்துசென்ற எனது மகனை அடுத்தநாள் பொலிஸ் நிலையத்தில் மயங்கிய நிலையிலேயே சிறைக்கூண்டுக்குள் கண்டேன்.
முதல்நாள் இரவு எனது கையினால் உணவு வழங்கிய பிள்ளைக்கு அடுத்தநாள் என்ன நடந்தது என்று தெரியாத நிலையில் உயிரிழந்த செய்தி கிடைத்தது எனத் தெரிவித்து நீதி கோரி அவரது தாய் கண்ணீர் விட்டுள்ளார்.