பல நாடுகளில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு
ஜப்பான், தென் கொரியா மற்றும் இஸ்ரேல் போன்ற நாடுகளில் இலங்கையர்களுக்கு அதிக வேலைவாய்ப்புகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக வெளியுறவு மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்தார்.
புதிய அரசாங்கத்தின் நியமனத்துடன், பல்வேறு துறைகளில் அரசியல் தலையீடு இல்லாததால் ஈர்க்கப்பட்ட வளர்ந்த நாடுகள், இலங்கை தொழிலாளர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளைத் திறந்து வருவதாக பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பல பிரிவுகள் புதிய அலுவலக வளாகத்தில் நிறுவப்பட்டதை முன்னிட்டு பத்தரமுல்லையில் நடைபெற்ற விழாவில் பங்கேற்ற போது அமைச்சர் இவ்வாறு கூறினார்.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பல பிரிவுகள் நாரஹேன்பிட்டியில் உள்ள மெஹ்வரா பியச அலுவலகத்தில் இயங்கியதுடன், வெளிநாட்டு சமூகத்திற்கு ஏற்பட்ட சிரமத்தை கருத்தில் கொண்டு, இந்த பிரிவுகள் பத்தரமுல்லையில் உள்ள தலைமை அலுவலகத்திற்கு அருகிலுள்ள ஒரு கட்டிடத்தில் நிறுவப்பட்டன.