நகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் விற்பனை செய்த ஊழியர்
கொழும்பு மாநகர சபை ஊழியர்களுக்கு ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளை விற்பனை செய்த அலுவலக உதவியாளரை ஊழல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
38 வயதான நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டு, பின் பொரளை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நீண்ட காலமாக தனது அலுவலக அறையில் குறித்த போதைப்பொருட்களை கவனமாக பொதி செய்து நகராட்சி ஊழியர்களுக்கு விற்பனை செய்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பந்தப்பட்ட நபர் குறித்த அலுவலகத்தில் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார். வலன ஊழல் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து முன்னெடுக்கப்பட்ட சோதனையில் சந்தேக நபரிடமிருந்து இருபதாயிரம் மில்லிகிராம் ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கைதான சந்தேக நபரை புதுக்கடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய பின்னர், தடுப்பு உத்தரவு பெறப்பட்டு மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்படுகிறது.