இலங்கை பொலிஸாருக்கான அவசர அறிவிப்பு!
தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர்களை அங்கிருந்து வெளியேற வேண்டாம் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன அறிவித்துள்ளார்.
இது தொடர்பான அறிவிப்பை இன்று அவர் வெளியிட்டுள்ளார். அந்தந்த பகுதிகளில் தனிமைப்படுத்தும் நிலை நீங்கும் வரை பொலிஸ் உத்தியோகத்தர்களை வீட்டிலேயே இருக்குமாறும் அவர் பணிப்புரை விடுத்துள்ளார்.
அத்துடன் அவர்கள் வேலைக்கு செல்லவில்லை என்பதற்கான அறிக்கையை சமர்ப்பிக்க தேவையில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இதேவேளை , நாட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு யாரும் நுழையவோ வெளியேறவோ முடியாது என்றும் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
சுகாதார அதிகாரிகளும் அத்தியாவசிய சேவைகளில் ஈடுபடுபவர்கள் மட்டுமே தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்குள் நுழைந்து வெளியேற முடியும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் தனிமைப்படுத்தல் சட்டங்களை மீறுபவர்கள் மீது கடும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அஜித் ரோஹன எச்சரித்துள்ளார்.
இதேவேளை இலங்கையில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துவரும் நிலையில் பல பகுதிகள் முடக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.