ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வரும் எலான் மஸ்க்
உலக பெரும் பணக்காரரும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவுனருமான இலான் மஸ்க் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு வரவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஓர் அங்கமான ஸ்டார்லிங்க் இணையச் சேவையை இலங்கையில் ஆரம்பிப்பதற்கான ஆயத்தப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
சட்டத்திலும் அண்மையில் திருத்தம்
இதற்காக 28 வருடங்கள் பழைமையான தொலைத்தொடர்புகள் சட்டத்திலும் அண்மையில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இந்தப் பணிகள் அனைத்தும் இம்மாத இறுதிக்குள் நிறைவுசெய்யப்பட்டு, அடுத்த மாத ஆரம்பத்தில் ஸ்டார்லிங்க் நிறுவனத்துடன் ஒப்பந்தம் கைச்சாத்திடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை , இலான் மஸ்கின் இலங்கை விஜயம் தொடர்பாக அவரது தரப்பிலிருந்தோ அல்லது இலங்கையின் வெளிவிவகார அமைச்சிலிருந்தோ இதுவரையில் உத்தியோகப்பூர்வ அறிவிப்புகள் எவையும் வெளியாக்கப்படவில்லை.