ட்விட்டர் ஊழியர்களை ட்விட்டரிலே எச்சரித்த எலன் மாஸ்க்
எலன் மஸ்க் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி மற்றும் உலகின் மிகப்பெரிய பணக்காரர் ஆவார்.
ட்விட்டர் சமூக ஊடக நிறுவனத்தை 44 பில்லியன் டாலர்களுக்கு (சுமார் ரூ. 3.30 டிரில்லியன்) வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் அவர் சமீபத்தில் கையெழுத்திட்டார். இதையடுத்து அவர் தனது மின்சார கார் நிறுவனமான டெஸ்லாவின் 44 லட்சம் பங்குகளை விற்றார். அவர் ட்விட்டரை வாங்குவதற்கான ஒப்பந்தத்தை முடிப்பதற்காக டெஸ்லாவில் தனது பங்குகளை விற்றதாகக் கூறப்படுகிறது.
அவர் ட்விட்டர் நிறுவனத்தை வாங்குவதற்காக அவர் ஒப்பந்தம் செய்த முழுத்தொகையை செலுத்திய பின்னர் அவர் நிறுவனத்தின் முழு பொறுப்பையும் எடுத்துக்கொள்வார் என தெரிகிறது.
இந்நிலையில், ட்விட்டரை கையகப்படுத்திய பிறகு அந்நிறுவனத்தில் ஏற்படும் அதிரடி மாற்றங்கள் குறித்து ட்வீட் செய்துள்ளார்.
சமீபத்திய ட்விட்டர் பதிவில், “ட்விட்டர் இனி ஹார்ட்கோர் மென்பொருள் பொறியியல், வடிவமைப்பு, இன்ஃபோசெக் மற்றும் சர்வர் ஹார்டுவேர் ஆகியவற்றில் கவனம் செலுத்தாது. தொழில்நுட்ப துறையில் உள்ள அனைத்து மேலாளர்களும் தொழில்நுட்ப ரீதியாக உயர்ந்தவர்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
நிறுவனத்தை வெற்றியடையச் செய்ய ஊழியர்களுக்காக கடுமையாக உழைப்பேன். மேலும் பணி நெறிமுறை எதிர்பார்ப்புகள் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படும், ”என்று அவர் பதிவிட்டுள்ளார்.
மஸ்கினின் இந்த எச்சரிக்கை ட்விட்டர் ஊழியர்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியது.