இந்தியப் பெருங்கடலில் வெடித்துச் சிதறிய எலான் மஸ்க்கின் ஸ்டார்ஷிப் வி3
எலான் மஸ்க்கின் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்துக்குச் சொந்தமான உலகின் மிகப்பெரிய சக்திவாய்ந்த ‘ஸ்டார்ஷிப் வி3’ ரொக்கெட், இந்தியப் பெருங்கடலில் விழுந்து வெடித்துச் சிதறியுள்ளது.
டெக்சாஸிலுள்ள விண்வெளித் தளத்திலிருந்து கடந்த 22ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட 12ஆவது சோதனை ஓட்டத்தின்போது இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
எனினும், இது திட்டமிட்ட கட்டுப்படுத்தப்பட்ட தரையிறக்க சோதனை எனவும், ரொக்கெட் தனது முக்கிய இலக்குகளை வெற்றிகரமாக நிறைவேற்றியதாகவும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுமார் ஒரு மணி நேர பயணத்திற்குப் பிறகு இந்தியப் பெருங்கடலில் தண்ணீரைத் தொட்ட ரொக்கெட், பின்னர் வெடித்துச் சிதறியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனை ஓட்டத்தின் போது சில இயந்திர கோளாறுகள் ஏற்பட்ட போதிலும், திட்டமிட்ட நோக்கங்கள் நிறைவேற்றப்பட்டதாகவும் நிறுவனம் விளக்கியுள்ளது.