X செயலி மூலமாகவும் பணம் அனுப்பும் வசதி!
பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார். அமேசான், வாட்ஸ் அப் போன்ற மொபைல் ஆப்களில் கூட மற்றவர்களுக்கு பணம் அனுப்பும் வசதி வந்துவிட்டது.
முன்பெல்லாம் செல்போன் மூலம் பணம் அனுப்புவதற்கு GPay, PhonePe போன்ற சில பிரத்தியாக app கள் மட்டுமே இருந்தன.

ஆனால், தற்போது பல வகையான மொபைல் ஆப்கள் மூலம் பணம் அனுப்பும் வசதிகள் வந்துவிட்டன. இந்த நிலையில்தான் முன்பு டிவிட்டராக இருந்து தற்போது X என மாறியிருக்கும் தளத்திலும் பணம் அனுப்பும் வசதியை அதன் நிறுவனர் எலன் மஸ்க் அறிவித்திருக்கிறார்.
இதன் மூலம் பயனர்கள் X செயலி மூலமாகவும் பணம் அனுப்பவும் தங்கள் பில்களை செலுத்தவும் முடியும் என அவர் அறிவித்திருக்கிறார். சமூக ஊடக தளத்தை எல்லாவற்றுக்குமான ஒரே செயலியாக மாற்றும் நோக்கத்தில் இந்த அதிரடி வசதி கொண்டுவரப்பட்டிருப்பதாக அவர் கூறியிருக்கிறார்.