எசல பெரஹெர விழாவில் யானையால் குழப்பம்!(Photos)
வலஸ்முல்ல, வராபிட்டிய வரலாற்றுச் சிறப்புமிக்க சித்தம்கல்லென ரஜமஹா விகாரையின் எசல பெரஹெர திருவிழாவில் நேற்று (07) கதிர்காமம் தேவாலய பெரஹெர வீதி உலா இடம்பெற்றது.
இதன்போது, ஊர்வலத்தில் சென்ற யானை ஒன்று குழப்பம் விளைவித்தமையால் பதற்றம் ஏற்பட்டது.
தீயால் யானை பதற்றம்
ஊர்வலத்தில் பயணித்த காவடி நடனக் குழுவினர் நுளம்பு விரட்டி மருந்தை தெளிக்கும் போது, அங்கு தீ ஏற்பட்டதன் காரணமாக யானை பதற்றமடைந்து ஓடியதனால் குழப்பம் ஏற்பட்டது.
இதனையடுத்து அங்கிருந்த மக்களும் சிதறி ஓடினர். எனினும் இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகின்றது.
இதனையடுத்து ஏற்பாட்டுக் குழுவினர் யானையை கட்டுப்படுத்தியதை அடுத்து ஊர்வலம் வெற்றிகரமாக வீதிகளில் சுற்றிவந்து நிறைவு பெற்றதாக ஊர்வல ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்தனர்.