வைத்தியசாலைகளின் மின்கட்டணம் தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்!
நாட்டில் உள்ள அரச வைத்தியசாலைகள் உட்பட சுகாதார அமைச்சுக்கு சொந்தமான நிறுவனங்களில் செலுத்தப்படாத மின் கட்டணங்களை செலுத்துவதற்கு மின்சார சபையுடன் இணக்கம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல Keheliya Rambukwella தெரிவித்துள்ளார்.
சுகாதார அமைச்சர் சிங்கள ஊடகம் ஒன்றுக்கு கருத்து வெளியிட்ட போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த சுகாதார அமைச்சர்,
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகள் குழு ஒன்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் Ranil Wikcremesinghe கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறினார்.
மேலும் குறித்த கலந்துரையாடலின் போது, மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்தல் உள்ளிட்ட சுகாதாரத் துறையில் ஏற்பட்டுள்ள பல பிரச்சினைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் வைத்தியர் ஹரித அலுத்கே தெரிவித்தார்.