வலி தெற்கு தவிசாளர் தெரிவு இழுபறியில்
யாழ்ப்பாணம் வலி தெற்கு தவிசாளர் தனகோபியா இல்லை பிரகாஷா என்கின்ற வாதப்பிரதிவாதங்கள் சமூக வலைத்தளங்களில் உலாவுகின்றது.
வலி தெற்கை பொறுத்தவரை மொத்தமாக உள்ள ஆசனங்கள் 31 அதில் தவிசாளராக தெரிவுசெய்யப்படுபவர் குறைந்தது 16 ஆனங்களை கொண்டிருக்க வேண்டும் .
திசைகாட்டி ஆதரவு வழங்கினால் மட்டுமே சாத்தியம்
ஆனால் ஆசனங்கள் வீடு -13 சங்கு -6 சைக்கிள் -6 திசைகாட்டி - 5 வீணை -1 என காணப்படுவதால் தமிழரசுக்கட்சியால் தனித்து ஆட்சியமைக்க முடியாது.
எனவே சங்கு, சைக்கிள் அல்லது திசைகாட்டியின் ஆதரவு தேவையானது என்பது வெளிப்படை. பிரகாஸ் அவர்களை தவிசாளராக தெரிவு செய்யப்படுவதை சங்கு மற்றும் சைக்காள் கட்சியினர் விரும்பப்போவதில்லை.
இதற்கு கடந்த பிரதேசசபையில் த.தே.கூ பங்காளி கட்சியான புளொட்டுக்கு வழங்கப்பட்ட சபையில் அவர்களை ஆட்சியமைக்க விடாது பல குழறுபடிகளில் பிரகாஸ் ஈடுபட்டமையானால் தன கோபியை தவிசாளராக நிறுத்தினாலே ஆதரிப்பார்கள்.
இதை தாண்டி பிரகாஸ் தவிசாளராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்றால் திசைகாட்டி ஆதரவு வழங்கினால் மட்டுமே சாத்தியமாகும் என்றும் சமூக வலைத்தள பதிவுகள் கூறுகின்றன.