கடுமையாக்கப்படும் தேர்தல் விதிமுறைகள்
இலங்கையில் செப்ரெம்பர் 21 ஆம் திகதி ஜனாதிபதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், இன்று (15) முதல் வாக்களிப்பு முடியும் வரை அனைத்து தேர்தல் சட்டங்களும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என தேசிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அதன்படி, சமூக வலைதளங்களில் பொய்யான விளம்பரம் செய்ய தடை வித்துள்ளதாக கூறியுள்ள தேர்தல்கள் ஆணைக்குழு, வேட்பாளர்களுக்கு பாரபட்சம் ஏற்படுத்தும் வகையில் செயல்படக் கூடாது. ஜனாதிபதி தேர்தல் முடிந்து ஒரு வாரம் வரை ஆர்ப்பாட்டங்கள் கண்டிப்பாக தடை செய்யப்பட்டுள்ளது.
இதுபோன்ற செயல்களை தடுக்க காவல்துறைக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதோடு ஒலிபெருக்கிகளை பயன்படுத்த காவல்துறை அனுமதி பெற்றிருக்க வேண்டும்.
மேலும் வாக்குகளைப் பெற லஞ்சம் மற்றும் தேவையற்ற செல்வாக்கைத் தவிர்க்க வேண்டும் .
அரசு நிறுவனங்களையும், அரசு அதிகாரிகளையும் தவறாக பயன்படுத்தக் கூடாது.