தேர்தல் பிரச்சார பேரணி இன்று ஆரம்பம்!

Sulokshi
Report this article
எதிர்வரும் செப்ரெம்பர் 21 ஆம் திகதில் இலங்கையில் நடைபெறவுள்ள 9 ஆவது ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ள ஜனாதிபதி வேட்பாளர்கள் சிலர் இன்று(17) தேர்தல் பிரச்சாரத்தை ஆரம்பிக்கவுள்ளனர்.
அதன்படி சுயேட்சை வேட்பாளர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வெற்றிக்காக ஏற்பாடு செய்யப்பட்ட ஆரம்பக்கட்ட பேரணி இன்று அனுராதபுரம் சல்காது விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதித் தேர்தல் வேட்பாளர் அனுரகுமார திஸாநாயக்க இன்று தென் மாகாணத்தில் தனது ஆரம்பக் கூட்டங்களை ஆரம்பிக்கவுள்ளார்.
அனைத்து மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் திலித் ஜயவீரவின் தேர்தல் பிரச்சார பேரணி இன்று யாழ்ப்பாணம் ரக்கப்பிட்டியில் நடைபெறவுள்ளது.
மேலும் ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சையாக போட்டியிடும் நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவின் தேர்தல் பிரசாரம் இன்று கம்பஹாவில் ஆரம்பமாகவுள்ளது.