வீதியைக் கடக்க முயன்ற மூதாட்டி பேருந்து மோதி பலி: சாரதி கைது!
மாத்தறை - காலி பிரதான வீதியின் சமுத்திர மாவத்தை சந்திக்கு அருகில் நேற்று (25) இடம்பெற்ற விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
மாத்தறையிலிருந்து காலி நோக்கிப் பயணித்த தனியார் பஸ் ஒன்று, பஸ் தரிப்பிடத்தில் பயணிகளை இறக்கிவிட்டு மீண்டும் முன்னோக்கிச் செல்ல முற்பட்ட போது, பஸ்ஸிலிருந்து இறங்கி வீதியைக் கடக்க முயன்ற பெண் மீது மோதி விபத்து சம்பவித்துள்ளது.

விபத்தில் படுகாயமடைந்த பெண் உடனடியாகக் கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் உயிரிழந்தவர் வெலிகம பகுதியைச் சேர்ந்த 74 வயதுடைய மூதாட்டி ஒருவராவார். விபத்துடன் தொடர்புடைய தனியார் பஸ்ஸின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், காலி பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.