இன்று இடம்பெற்ற கோர விபத்து; முதியவரை பந்தாடிவிட்டு தப்பியோடிய இராணுவ வாகனம்
வவுனியா, பாரதிபுரம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் முதியவர் ஸ்தலத்தில் உயிரிழந்த நிலையில் விபத்தை ஏற்படுத்திய வாகனம் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இந்த விபத்து சம்பவம் இன்று பிற்பகல் குறித்த விபத்து இடம்பெற்றது. இவ் விபத்து குறித்து மேலும் தெரியவருவதாவது, வவுனியா- நெளுக்குளம் பகுதியில் இருந்து செட்டிகுளம் நோக்கிச் சென்ற பெண் ஒருவரின் மோட்டர் சைக்கிள் ஒன்று பாரதிபுரம் 50 வீட்டுதிட்ட சந்திக்கு அண்மித்த தம்பனை புளியங்குளம் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த போது எதிர் திசையில் வந்த முதியவர் ஒருவரின் மோட்டர் சைகிளுடன் மோதி விபத்துக்குள்ளானது.

இதன்போது, விபத்துக்குள்ளான முதியவர் மீது வீதியால் சென்ற பிறிதொரு வாகனம் அவரது தலைப் பகுதியில் மோதியதால் அவர் பலியானார். எனினும் விபத்தை ஏற்படுத்திய வாகனம் அங்கிருந்து சென்றுள்ள நிலையில் சம்பவ இடத்திற்கு கு வருகை தந்த வவுனியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
விபத்தில் மோட்டர் சைக்கிளில் பயணித்த வவுனியா, விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்த 64 வயதுடைய தர்மராஜா என்ற முதியவரே உயிரிழந்துள்ளார்.

அத்துடன் எதிர் திசையில் பயணித்த மோட்டர் சைக்கிள் சாரதியான பெண் காயமடைந்து வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
விபத்து இடம்பெற்ற போது முதியவரின் பின்னால் இராணுவத்தினரது வாகனம் ஒன்று வந்ததாகவும், விபத்து இடம்பெற்ற பகுதியில் பாரிய சத்தம் கேட்டதாகவும், இராணுவத்தினரது வாகனம் அங்கு நின்று விட்டு, உடனடியாக அங்கிருந்து கு சென்றதாகவும் அங்கிருந்த மக்கள் தெரிவித்துள்ளதாக கூறப்படுகின்றது.

