சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் மீது கத்திக்குத்து
களுத்துறை - பயாகலை பிரதேசத்தில் இரு நபர்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறை சமரசம் செய்ய முயன்ற வயோதிபர் ஒருவர் மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளதாக பயாகலை பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் நேற்று (16) மாலை 05.00 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
பயாகலை பிரதேசத்தில் வயோதிபர் ஒருவர் தனது மருமகனுடன் மோட்டார் சைக்கிளில் சென்றுக்கொண்டிருக்கும் போது உணவகம் ஒன்றுக்கு அருகில் வீதியின் குறுக்கே முச்சக்கரவண்டி ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதை கண்டுள்ளனர்.

வீதியின் குறுக்கே முச்சக்கரவண்டி
பின்னர் மோட்டார் சைக்கிளில் இருந்த வயோதிபரும் அவரது மருமகனும் உணவக உரிமையாளரான முச்சக்கரவண்டி சாரதியிடம் முச்சக்கரவண்டியை சற்று நகரத்தி வழிவிடுமாறு கூறியுள்ளனர்.
இதன்போது கோபமடைந்த முச்சக்கரவண்டி சாரதி தனது உணவகத்தில் இருந்த மன்னா கத்தியை எடுத்து வந்து வயோதிபரின் மருமகனுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். தகராறின் போது முச்சக்கரவண்டி சாரதி வயோதிபரின் மருமகனை மன்னா கத்தியால் தாக்க முயன்றுள்ளார்.
இதனை அவதானித்த வயோதிபர் தகராறை சமரசம் செய்ய முயன்ற போது மன்னா கத்தியால் தாக்கப்பட்டு படுகாயமடைந்துள்ளார். படுகாயமடைந்தவர் பயாகலை , இந்துருவகொட பிரதேசத்தைச் சேர்ந்த வயோதிபர் ஆவார்.
சம்பவம் தொடர்பில் பயாகலை பொலிஸார் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.