யாழில் முதியவரை பராமரித்தவர் நகைகள் ,வெளிநாட்டு பணத்துடன் ஓட்டம்
யாழ்ப்பாணம் - ஊர்காவற்துறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மண்டைதீவு - 06ஆம் வட்டாரம் பகுதியில் நகைகள், யூரோக்கள் மற்றும் பணம் என்பன களவாடப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவர் ஊர்காவற்துறை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
நகைகள் பணம் மற்றும் யூரோக்கள்
மட்டக்களப்பை சேர்ந்த குறித்த சந்தேகநபர் மண்டைதீவு முதியவரின் வீட்டில் தங்கியிருந்து அங்கிருந்த முதியவர் ஒருவரை பராமரித்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் முதியவர் உயிரிழந்துள்ளார். இதனையடுத்து நேற்றையதினம் அந்த வீட்டுக்கு சென்ற சந்தேகநபர், மூன்றரை பவுண் நகைகள், 3 இலட்சத்து 65 ஆயிரம் ரூபா பணம் மற்றும் 700 பிரான்ஸ் யூரோக்கள் என்பவற்றை திருடிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜபக்ச குடும்பம் எதிர்ப்பது தமிழர் நினைவுத்தூபிக்கு கிடைத்த கௌரவம்; நாமலுக்கு பதிலடி கொடுத்த பிரம்டன் மேயர்
இது குறித்து ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்ட நிலையில் ஊர்காவற்துறை பொலிஸார் சந்தேகநபரை கைது செய்துள்ளனர்.
கைதான சந்தேக நபரிடம் விசாரணைகளின் பின்னர் அவரை ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.