நாட்டை உலுக்கிய தம்பதி படுகொலை; சம்பவத்தால் அதிர்ச்சி
ஹட்டன் டிக்கோயா நகர் வர்த்தக ஸ்தாபனமொன்றில் தனிமையில் வாழ்ந்து வந்த தம்பதியினர் கூர்மையான ஆயுதங்களால் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சம்பவத்தில் வர்த்தகரான எஸ். காளிமுத்து சத்திவேல் (82 வயது) மற்றும் அவரது மனைவியான சகுந்தலாதேவி (82 வயது) என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

படுகொலை செய்யப்பட்ட தம்பதி
படுகொலை செய்யப்பட்ட தம்பதி முன்னதாக நகை வர்த்தக நிலையமொன்றை நடத்தி வந்ததாகவும், பின்பு வர்த்தக நிலையத்தை மூடி விட்டு அதன் பின்புறமாக இருந்த தமது வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்.
வீட்டில் கொள்ளையடிக்க வந்த எவராவது தம்பதிகளை கொலை செய்து விட்டு தப்பியோடியிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

உயிரிழந்த தம்பதியின் பிள்ளைகள் தமது பெற்றோருக்கு தொலைபேசி அழைப்புகளை மேற்கொண்ட போதிலும், அதற்கு அவர்கள் பதிலளிக்காததால், அயலவர்களுக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து அருகிலுள்ள வர்த்தக ஸ்தாபனங்களில் உள்ளவர்கள் கடையைத் திறந்து பார்த்தபோதே கணவனும் மனைவியும் வெட்டுக்காயங்களுடன் இறந்த நிலையில் இருப்பதை அறிந்து அட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது.

இக்கொலைச் சம்பவம் தொடர்பாக அட்டன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். தடயவியல் பரிசோதனைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்தனர்.