சனி வக்ர பெயர்ச்சி ; ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்காரர்களுக்கு எப்படி இருக்கும் தெரியுமா?
ஜோதிடத்தில் நீதிமான் என்று அழைக்கப்படுபவர் சனி பகவான். நவகிரகங்களிலேயே சனி பகவான் ஒரு ராசியில் நீண்ட காலம் பயணிக்கக்கூடியர். இதனால் சனி பகவானின் நிலையில் சிறு மாற்றங்கள் ஏற்பட்டாலும் அது அனைத்து ராசிக்காரர்களின் வாழ்க்கையிலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும்.
அந்த வகையில் தற்போது சனி பகவான் மீன ராசியில் பயணித்து வருகிறார்.இந்நிலையில் ஜூலை 27 ஆம் திகதி சனி பகவான் வக்ர நிலையில் பயணிக்கவுள்ளார்.

சனி பகவான் வக்ரமாகும் போது அதன் தாக்கம் சற்று தீவிரமாக இருக்கும். அதுவும் ஏழரை சனி நடப்பவர்களுக்கு இக்காலம் எப்படி இருக்கும் என்ற கேள்வி பலருக்கும் இருக்கும்.
தற்போது சனி பகவானின் நிலையால் மேஷம், மீனம் மற்றும் கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனி நடக்கிறது. இப்போது சனி வக்ரமாவதால் ஏழரை சனி நடக்கும் 3 ராசிக்கும் எப்படி இருக்கும் என்பதை நாம் இங்கு பார்ப்போம்.

மேஷம்
மேஷ ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் முதல் கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி வக்ரமாவதால், தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும். மனநிலையும் மோசமாக பாதிக்கப்படும். எந்த ஒரு முடிவையும் எடுக்க முடியாமல் குழப்பமடையக்கூடும். அவசரப்பட்டு எதையும் செய்வதைத் தவிர்க்க வேண்டும். செய்யும் வேலைகளில் தேவையில்லாத பிரச்சனைகளை சந்திக்கக்கூடும்.
கவனமாக இருக்க வேண்டியவை
சனி வக்ர காலத்தில் மேஷ ராசிக்காரர்கள் எதையும் சரியாக ஆராயாமல் நிதி முடிவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். புதிய முதலீடுகளையும் தவிர்க்க வேண்டும். ஆரோக்கிய விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

கும்பம்
கும்ப ராசிக்காரர்களுக்கு ஏழரை சனியின் கடைசி கட்டம் நடக்கிறது. இதனால் சனி வக்ரமாவதால் இந்த ராசிக்காரர்களின் நிதி நிலைமை சற்று ஏற்றஇறக்கத்துடன் இருக்கும். இருப்பினும், நீண்ட காலமாக நிலுவையில் உள்ள வேலைகள் வெற்றிகரமாக முடிவடைய வாய்ப்புள்ளது. பண பரிவர்த்தனைகளை செய்யும் போது சற்று எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
கவனமாக இருக்க வேண்டியவை
கடன் கொடுப்பதையோ, வாங்குவதையோ தவிர்க்க வேண்டும். எதையும் சரியாகவும் ஒழுக்கமாகவும் செய்ய வேண்டும். முக்கியமாக ஆரோக்கிய விஷயத்தை புறக்கணிப்பதைத் தவிர்க்க வேண்டும்.

மீனம்
மீன ராசிக்கு ஏழரை சனியின் இரண்டாவது கட்டம் நடக்கிறது. இந்நிலையில் சனி வக்ரமாவதால் பணியிடத்தில் பொறுப்புக்களும், மன அழுத்தமும் அதிகரிக்கும். முன்பு எளிதில் முடிக்கப்பட்ட வேலைகள் தற்போது முடிக்க கடினமாக இருக்கலாம் அல்லது தாமதமாகலாம். பழைய பிரச்சனைகள் மீண்டும் தலைத்தூக்க வாய்ப்புள்ளது.
கவனமாக இருக்க வேண்டியவை
பணியிடத்திலோ அல்லது அலுவலகத்திலோ பணிகளை பாதியாக செய்வதைத் தவிர்க்க வேண்டும். எந்த வேலையையும் முழுமையாக செய்து முடிக்க வேண்டும். பேச்சையும், கோபத்தையும் கட்டுப்படுத்த வேண்டும். வாக்குவாதங்களில் ஈடுபடுவதைத் தவிர்க்க வேண்டும்.
