நீங்கள் சாப்பிடும் முட்டை ஆரோக்கியமானது தானா? கண்டறிவது எப்படி தெரியுமா
தினமும் நாம் முட்டை சாப்பிடுவதால் அதில் கிடைக்கும் நன்மைகள் அதிகம். மேலும் உடலுக்கு தேவையான புரதம் அதில் கிடைக்கிறது.
இருப்பினும் நாம் சாப்பிடும் முட்டையில் புரதம் மிக குறைவாக இருந்தால், அதனால் ஆரோக்கியமான பலன்களை பெற முடியாது. இந்நிலையில், நாம் சாப்பிடும் முட்டை உள்ள இருக்கும் கருவின் நிறத்தை வைத்து அதில் புரதம் குறைவாக உள்ளதா? அதிகமாக உள்ளதா? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
முட்டையின் உள்ளே இருக்கும் மஞ்சள் கரு முட்டையின் ஆரோக்கியத்தை பற்றி சொல்கிறது. முட்டையின் மஞ்சள் கருவின் நிறத்தைப் பார்த்தால், முட்டையிட்டது ஆரோக்கியமான கோழியா அல்லது ஆரோக்கியமற்ற கோழியா என்பதை அறியலாம். அதன் மூலம் முட்டையில் புரோட்டீன் அதிகம் உள்ளது என்று சொல்லலாம்.
மேலும், புரதத்தைத் தவிர முட்டை பல ஊட்டச்சத்துக்களை நமக்கு கொடுக்கின்றது, இது ஒரு அருமையான உணவு என்றால் மிகையில்லை. சந்தையில் வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு விலையில் முட்டைகள் உள்ளன. அதன் தரவும் வெவ்வேறாக உள்ளன.
இதேவேளை, முட்டையை உடைக்கும் போது அதிலிருக்கும் மஞ்சள் கரு முக்கியமாக மூன்று வகையாக இருக்கும். ஆரஞ்சு, வெளிர் ஆரஞ்சு அல்லது மஞ்சள். இதில், ஆரஞ்சு மஞ்சள் கருவுடன் கூடிய முட்டை மிகவும் ஆரோக்கியமானது மற்றும் அதில் உள்ள புரதம் மற்றும் பிற ஊட்டச்சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளது.