மே 1 முதல் குறையும் முட்டை விலை
தற்போதைய விலையிலும் குறைந்த விலையில் முட்டைகளை மே.1 ஆம் திகதி முதல் நுகர்வோருக்கு விற்பனைச் செய்யமுடியும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்காலத்தில் முட்டையின் விலை இன்னும் குறையும். டிசெம்பர் மாதமளவில் முட்டை ஒன்றை 25 அல்லது 30 ரூபாய்க்கு விற்பனைச் செய்யமுடியுமென அந்த சங்கத்தின் தலைவர் சரத் ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், பண்டிகை காலங்களில் ஆகக்கூடுதலான விலைக்கு முட்டையை விற்பனைச் செய்த 700 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என நுகர்வோர் அதிகார சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் 6,000 சிறிய சுற்றிவளைப்புத் தேடுதல்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன என அந்த அதிகார சபையின் தலைவர் ஷாந்த கிரியெல்ல தெரிவித்தார்.