இலங்கையில் மீண்டும் உச்சம் தொடும் நிலையில் முட்டையின் விலை
கோழிப்பண்ணை உரிமையாளர்களைப் பாதுகாக்க அரசாங்கம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாவிட்டால் மீண்டும் ஒரு முட்டையின் விலை 70 ரூபாய்க்கு மேல் உயர்வதைத் தடுக்க இயலாது என இலங்கை கால்நடை உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
முட்டை உற்பத்தியாளர்கள் தற்போது வற் வரி செலுத்த வேண்டியிருப்பதால் கோழிப் பண்ணைகள் மூடப்படும் அபாயத்தை எதிர்கொள்வதாக சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.
அரிசி, காய்கறிகள் மற்றும் மீன்பிடித் தொழில் போன்ற விவசாயப் பொருட்களுக்கு வற் வரி விதிக்கப்படவில்லை என்றாலும், கோழிப்பண்ணைத் தொழிலில் ஈடுபடுபவர்கள் அரசாங்கத்திற்கு வரி செலுத்துகிறார்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
முட்டை உற்பத்தி அதிகரித்திருந்தாலும், முட்டைகளுக்கான தேவை குறைந்து வருவதால் நாட்டில் முட்டை உற்பத்தி உபரியாக இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
முட்டை உற்பத்தியாளரின் வருமானத்தின் அடிப்படையில் VAT நிர்ணயிக்கப்படுகிறது என்றும் சங்கத்தின் தலைவர் தெரிவித்துள்ளார்.