ஆறுமுறை ஒலித்த அபாய சங்கு...தெறிக்க விடும் ஈரான்; பாதுகாப்புத் தேடி ஓடிய இஸ்ரேலியர்கள்
ஆறு தடவைகள் அபாயச் சங்கு (Sirens) ஒலிக்கவிடப்பட்ட நிலையில், மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்புத் தேடி பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைந்ததாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
ஈரானின் இராணுவக் கட்டமைப்பு பாரியளவில் சிதைக்கப்பட்டுள்ளதாக இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். எனினும், இஸ்ரேலின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளை இலக்கு வைத்து ஈரான் இன்னமும் ஏவுகணைத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகின்றது.

ஈரானால் இனி புதிய பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்க முடியாது
இஸ்ரேலிய மதிப்பீடுகளின்படி, ஈரானால் ஏவப்பட்ட ஏவுகணைகளில் ஒன்று இடைமறித்து அழிக்கப்பட்டதுடன், மற்றுமொரு ஏவுகணை திறந்த வெளியில் வீழ்ந்து வெடித்துள்ளது. அத்துடன், கிளஸ்டர் ரக வெடிபொருட்களைக் கொண்ட ஏவுகணை ஒன்றும் ஏவப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ஈரானால் இனி புதிய பலிஸ்டிக் ஏவுகணைகளைத் தயாரிக்க முடியாது என நெதன்யாகு கூறி வருகின்ற போதிலும், ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரிடம் தற்போது கைவசமுள்ள ஏவுகணைகள் இஸ்ரேலியர்களுக்குத் தொடர்ந்தும் அச்சுறுத்தலாகவே உள்ளன.
குறிப்பாக நேற்று இரவு மட்டும் சுமார் ஆறு தடவைகள் அபாயச் சங்கு (Sirens) ஒலிக்கவிடப்பட்ட நிலையில், மில்லியன் கணக்கான இஸ்ரேலியர்கள் பாதுகாப்புத் தேடி பதுங்கு குழிகளுக்குள் தஞ்சமடைந்தனர்.
ஈரானிய அரசாங்கத்தைப் பலவீனப்படுத்தி, அந்த ஆட்சியை கவிழ்ப்பதே இந்தப் போரின் நோக்கம் என நெதன்யாகு ஆரம்பத்தில் குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில் , வான்வழித் தாக்குதல்கள் மூலம் மட்டும் ஓர் ஆட்சியை வீழ்த்துவது கடினம் என்றும், அதற்கு அந்நாட்டு மக்களின் கிளர்ச்சியும் அவசியம் என்றும் இஸ்ரேலிய அரசியல்வாதிகள் தற்போது கருத்து வெளியிடத் தொடங்கியுள்ளனர்.