முட்டை விலை தொடர்பில் மகிழ்ச்சியான அறிவிப்பை வெளியிட்ட லங்கா சதொச!
இலங்கையில் ஒவ்வொரு வாடிக்கையாளரும் 35 ரூபா என்ற விலையில் 30 முட்டைகளை கொள்வனவு செய்ய முடியும் என லங்கா சதொச நிறுவனம் அறிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரியவருவதாவது,
நாட்டில் சமீப காலமாக உள்ளூர் முட்டையின் விலை அதிகரித்த நிலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதேவேளை, இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் முட்டைகளுக்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான நிலையில் சதொச நிறுவனம் நாள் ஒன்றுக்கு ஒரு மில்லியன் முட்டைகளை விநியோகிப்பதுடன் அவற்றை நிர்வகித்து ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் முட்டைகளை வழங்கும் நோக்கில் ஒருவர் 30 முட்டைகள் மாத்திரம் கொள்வனவு செய்யலாம் என தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை அடுத்த சில நாட்களில் அந்த தொகை மட்டுப்படுத்தப்படும் எனவும் லங்கா சதொச தெரிவித்துள்ளது.