கனடாவில் மில்லியன் டாலர்களை நன்கொடையாக வழங்கிய ஈழத் தமிழன்
கனடாவில் மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் விதமாக ஈழத்தமிழரான ரோய் ரத்னவேல் மற்றும் அவரது மனைவி சூ நாதனும் ஸ்கார்பரோ ஆரோக்கிய வலையமைப்பு அறக்கட்டளைக்கு மில்லியன் டொலர்களை நன்கொடையாக வழங்கியுள்ளனர்.
1969 ஆம் ஆண்டு யாழ்.வடமராட்சியில் பிறந்த ரோய் ரத்னவேல். பதினேழு வயதில், ஒரு அரசியல் கைதியாகி, கொடூரமான மற்றும் அடக்குமுறை சூழ்நிலைகளில் கடுமையாக கழித்து சிறையில் இருந்து அதிர்ஷ்ட வசமாக விடுவிக்கப்பட்ட பின் சட்டைப்பையில் $50 உடன் பதினெட்டு வயதில் கனடாவுக்குத் சென்ற ரத்னவேல்,
தற்போது கனடாவின் மிகப்பெரிய சுயாதீன சொத்து மேலாண்மை நிறுவனத்தில் ஒரு நிர்வாகியாக உள்ள நிலையில் தன்னுடைய வாழ்க்கை அனுபவங்கள் மூலம் மனநலம் தொடர்பான பெரும் சவால்களை நன்கு அறிந்திருக்கும் ரோய் ரத்னவேல், மனநலப் பிரச்சினைகளை எதிர்த்துப் போராடுபவர்களுக்கு சரியான ஆதரவை வழங்குவதற்கு முன்வந்துள்ளார்.
மேலும் பிர்ச்மவுண்ட் மருத்துவமனையில் உள்நோயாளி மனநலத்தை விரிவுபடுத்துவதற்கும், தொடர்ச்சியான மனநல நிலைமைகள் மற்றும் பிற சிக்கலான சுகாதாரத் தேவைகளைக் கொண்ட பாதிக்கப்படக்கூடிய நபர்களை ஆதரிப்பதற்கும் அது குறிப்பாக உதவும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றமையும் இவரின் இந்த சமூக சேவையை பலரும் பாராட்டி வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .