சபையில் பெண் எம்.பியை நோக்கி தகாத வார்த்தை பிரயோகித்த கல்வி அமைச்சர்!
கல்வி அமைச்சுக்குள் பிக்கு மாணவர்கள் உள்ளிட்டோர் பிரவேசித்தபோது கைது செய்யப்பட்ட இரு ஆசிரியர்களையும் தாம் தலையிட்டு விடுவித்ததாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) தெரிவித்துள்ளார்.
நேற்றைய தினம் (24-02-2023) நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.
கல்வி அமைச்சுக்குள் பாளி மற்றும் பௌத்த பல்கலைக்கழக மாணவர் பிக்குகள் குழுவொன்று அத்துமீறி நுழைந்த சம்பவம் தொடர்பில் மாத்தளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரி விஜேரத்ன (Rohini Kumari Wijeratne) கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் கல்வியமைச்சருக்கும், நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினி குமாரிக்கும் இடையில் இடம்பெற்ற கடுமையான வாதத்தின்போது, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த நாடாளுமன்ற உறுப்பினரை நோக்கி தகாத வார்த்தை பிரயோகத்தை மேற்கொண்டிருந்தார்.