டீயுடன் இதனை உண்பதால் இத்தனை ஆபத்தா!
காலையில் எழுந்தவுடன் டீயுன் அன்றைய நாளை தொடங்குபவர்கள் ஏராளம். இன்னும் சிலர் டீயுடன் ரொட்டி, பிஸ்கட் போன்றவற்றை சேர்த்து காலை உணவையே முடித்துவிடுகின்றனர்.
டீயுடன் ரொட்டி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிகவும் தீங்கு விளைவிக்கும்.
ஏற்படும் விளைவுவுகள்
ரொட்டிகளில் பெரும்பாலும் தீங்கு விளைவிக்கும் ரசாயனங்கள் கலக்கப்படுகின்றன. இதனால் அவை ஜீரணிக்க கடினமாக உள்ளது. இதன் காரணமாக வயிறு தொடர்பான பிரச்சனைகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி உடல் எடையை அதிகரிக்கவும் உதவுகிறது.
டீ மற்றும் ரொட்டி சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும். இதனை உட்கொள்வதால் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்கலாம். இதன் காரணமாக நீரிழிவு நோயாளிகளின் நிலை மோசமடையலாம்.
இரத்த அழுத்த நோயாளிகளுக்கு அதிக BP அளவை ஏற்படுத்தும். எனவே, இரத்த அழுத்த நோயாளிகளை மறந்தும்கூட, காலையில் டீயுடன் ரொட்டி சாப்பிடக்கூடாது.
காலையில் டீயை ரொட்டியுடன் சேர்த்து சாப்பிட்டால், அது வயிற்றில் உள்ள சவ்வு மற்றும் குடல்களை கரைத்துவிடும், ஏனெனில் டீ சாப்பிடுவதால் அமிலத்தன்மை பிரச்சனை ஏற்படுகிறது.