நாக்கிற்கு ருசி... உடலுக்கு விஷம்... ஆயுளுக்கு வேட்டு வைக்கும் துரித உணவுகள்!
பீட்சா, பர்கர், ஃபிரைடு சிக்கன், ஷவர்மா, பிரெஞ்ச் ஃப்ரைஸ், நூடுல்ஸ் போன்ற துரித உணவுகள் எளிதில் கிடைப்பதாலும், சுவையாக இருப்பதாலும் அவை அதிகம் விரும்பப்படுகின்றன.
ஆனால் இந்தப் பழக்கம் உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என வைத்தியர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர். துரித உணவில் இருக்கும் அபாயங்கள், அதிக கலோரி மற்றும் கொழுப்பு.

உடல்நலத்திற்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும்
அதிக உப்பு - இதனால் ரத்த அழுத்தம் உயரும். அதிக சர்க்கரை; நீரிழிவு அபாயம் அதிகரிக்கும். நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் குறைவு. செயற்கை நிறமிகள், சுவையூட்டிகள் அதிகம்.
தொடர்ச்சியாக ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிடுபவர்களுக்கு, உடல் பருமன் வகை-2 நீரிழிவு, இதய நோய் ,கொழுப்பு ,கல்லீரல் உயர் ரத்த அழுத்தம் ,செரிமான கோளாறுகள், சில வகை புற்றுநோய்கள் , மனஅழுத்தம் மற்றும் மனநல பாதிப்புகள் ஆகியவற்றின் அபாயம் அதிகரிக்கலாம்.

ஆரோக்கியமான சிற்றுண்டிகளைத் தேர்வு செய்யவும்
நள்ளிரவில் கனமான உணவுகளைத் தவிர்க்கவும். இரவு உணவை முன்கூட்டியே சாப்பிடும் பழக்கத்தை உருவாக்கவும்.
பசி எடுத்தால் பழங்கள், பருப்பு வகைகள், தயிர் அல்லது வெந்நீர் பால் போன்ற ஆரோக்கியமான சிற்றுண்டிகளைத் தேர்வு செய்யவும். தினமும் குறைந்தது 7-8 மணி நேரம் தூங்கவும்.
வாரத்தில் பெரும்பாலான நாட்களில் வீட்டில் சமைத்த சத்தான உணவுகளை சாப்பிடவும்.

அதேவேளை ஃபாஸ்ட் ஃபுட் உணவுகளை எப்போதாவது சாப்பிடுவது மட்டுமே பெரிய பிரச்சனையாக இருக்க வேண்டியதில்லை.
ஆனால் தினசரி அல்லது அடிக்கடி, குறிப்பாக நள்ளிரவில், இத்தகைய உணவுகளை உட்கொள்வது நீண்டகால உடல்நல பாதிப்புகளுக்கு வழிவகுக்கலாம். சமநிலையான உணவு, உடற்பயிற்சி மற்றும் போதுமான தூக்கம் ஆகியவை ஆரோக்கியமான நீண்ட ஆயுளுக்கு முக்கியமானவை.