வாழை இலையில் சாப்பிடுவது இவ்வளவு ஆரோக்கியமா!
காலம் காலமாக நமது முன்னோர்கள் வாழை இலையில் சாப்பிடுவதை கடைபிடித்து வந்தனர். எல்லா நாட்களிலும் இல்லாவிட்டாலும் விசேச நாட்களில் வாழை இலையில் சாப்பிடும் பழக்கம் இன்று கிராம புறங்களில் காணப்படுகின்றது.
வாழை இலையில் விருந்தோம்பல் செய்வது என்பது தமிழர்களின் பாரம்பரிய கலாச்சாரமாக உள்ளது.
ஆனால் நகர்ப்புற நவநாகரீக வாழ்க்கையில் வாழை இலை என்பதையே மக்கள் மறந்துவிட்டனர். அலங்கார தட்டுகளில் தான் தற்போது உணவுகள் சாப்பிட்டு வருகின்றனர். ஆனால் வாழை இலையில் சாப்பிட்டால் ஏராளமான பலன்கள் உண்டு என்பது முன்னோர்களின் கருத்தாக உள்ளது.
வாழை இலையில் சாப்பிடுவதால் என்னென்ன நன்மை...
வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை உணவை எளிதில் ஜீரணம் ஆக்கும் தன்மை உடையது .
வயிற்றுப்புண் உள்ளிட்டவற்றை ஆற்றும்.
அதுமட்டுமின்றி வாழை இலையில் சாப்பிட்டால் நன்றாக பசியை தூண்டும்.
நோயின்றி நீண்ட நாள் வாழ்வார்கள் என்றும் கூறப்படுகிறது.
வாழை இலையில் சாப்பிட்டால் நீண்ட ஆயுளுடன் இருக்கலாம் தோல் நோய்கள் வராமல் தடுக்கப்படும்.
ரத்தம் சுத்திகரிக்கப்படும். சிறுநீரக கற்கள் உருவாவதை தடுக்கும்.
சிறுநீர் தொடர்பான எந்த நோயும் வராது .
வாழை இலையில் தொடர்ந்து சாப்பிட்டால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .