தமிழக முதல்வர் பதவி ; முதலமைச்சராக விஜய் சந்திக்கப்போகும் சவால்கள் !
தமிழக சட்டசபை தேர்தலில் யாரும் எதிர்பார்க்காத விதமாக நடிகர் விஜய் தொடங்கிய தமிழக வெற்றிக் கழகம் முன்னிலையில் இருக்கிறது. தற்போதைய நிலவரப்படி தவெக 107 தொகுதிகளிலும், திமுக 74 தொகுதிகளிலும், அதிமுக 53 தொகுதிகளிலும் முன்னிலையில் இருக்கிறது.
விஜய் முதல்வராவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. ஏனெனில் ஆட்சி அமைக்க 11 தொகுதிகள் மட்டுமே தவெகவுக்கு தேவை. எப்படி பார்த்தாலும் விஜய்க்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது. தமிழக முதல்வர் பதவி ஏற்றது முதல் 5 வருட ஆட்சி வரை விஜய் பெரும் சவால்களை எதிர்கொள்ள வேண்டும் என அரசியல் ஆய்வாளர்கள் கூறியுள்ளனர் . இது தொடர்பில் இநித்திய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளதாவது ,

முதலமைச்சராக விஜய்க்கு முன் உள்ள சவால்கள்
வாக்கு எண்ணிக்கை முடிவில் தவெக 118 தொகுதிகளை தொட்டுவிட்டாலோ, அல்லது அதை தாண்டி விட்டாலோ விஜய் முதல்வர் என்பது உறுதியாகிவிடும். அடுத்தது பதவியேற்புதான்.
ஆனால் அப்படி இல்லாமல் போனால் அதிக கட்சிகளில் வெற்றிபெற்ற கட்சி என்கிற அடிப்படையில் தவெகவை ஆட்சி அமைக்க ஆளுநர் அழைப்பார், விஜய் சட்டசபையில் தனது பலத்தை நிரூபிக்க வேண்டும்.
விஜய் தனித்து போட்டியிட்டிருப்பதால் கண்டிப்பாக அதிமுகவிடம் இருந்துதான் ஆதரவு எம்எல்ஏக்களை பெற வேண்டும். அதற்கு அதிமுக கேட்கும் பேரங்களை ஒத்துக் கொள்ள வேண்டும்.
திமுகவை ஏன் மக்கள் ஒதுக்கினார்கள் என்பதை புரிந்து கொண்டு விஜய் சரியாக திட்டமிட்டு செயல்பட வேண்டும் முக்கியமாக சட்ட ஒழுங்கு சீர்கெட்டு போனது. இளைஞர்களிடம் அதிகரிக்க போதை கலாச்சாரம், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைகள் அதிகரித்தது ஆகியவைதான் திமுக தோல்வியடைந்தததற்கு முக்கிய காரணம்.
எனவே, இந்த மூன்றையும் விஜய் சரி செய்ய வேண்டும். காவல்துறையை தனது கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்து சட்டம் ஒழுங்கை சரி செய்வதோடு போதை கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க வேண்டும்.
அரசு அதிகாரிகளை சரியாக கையாள வேண்டும். முதல்வர் பதவி விஜய்க்கு புதிது என்பதால் நிர்வாகம் பற்றி ஐஏஸ் அதிகாரிகளிடம் கற்றுக்கொள்ள வேண்டும். ஒருபக்கம் அதிமுக, திமுக போன்ற திராவிட கட்சிகள் போல விஜயும் தேர்தல் வாக்குறுதிகளை அள்ளி வீசியிருக்கிறார்.
தமிழக பட்ஜெட்டே 4 ஆயிரம் கோடிதான். ஆனால், விஜய் சொன்னதை நடைமுறைப்படுத்த வேண்டுமானால் அதை தாண்டிய தொகை வேண்டும். அதை விஜய் எப்படி சமாளிக்க போகிறார் ?.
குறிப்பாக பெண்களுக்கு ஒவ்வொரு மாதமும் கொடுக்கப்படும் 1000 ரூபாய் தொகை 2500 ஆக உயர்த்தப்படும் என விஜய் கூறியிருக்கிறார். இதற்கு நிறைய பணம் தேவைப்படும். ஒருபக்கம் விஜயின் மீது விமர்சனங்கள் மறைய வேண்டும்.
அவரை சுலபமாக பார்க்க முடியாது, அவர் செய்தியாளர்களை சந்திக்க மாட்டார்.. எளிய மக்கள் அவரை நெருங்க முடியாது.. அவர் வீட்டை விட்டு வெளியே வரமாட்டார் போன்ற விமர்சனங்களை விஜய் மாற்ற வேண்டும்.. சட்டசபையில் சிறப்பாக செயலாற்ற வேண்டும்.
கண்டிப்பாக திமுக எதிர்க்கட்சியாக அமைய வாய்ப்பிருக்கிறது. எனவே அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்கு முதலமைச்சர் என்கிற முறையில் விஜய் சரியான பதில்களை சொல்ல வேண்டும். அதற்கு பல தகவல்களை விஜய் படித்து கற்றுக்கொள்ள வேண்டும் என அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்