தொப்பையை குறைக்க இந்த வேர் காய் கறிகளை சாப்பிடணுமாம்
நம்மில் பலர் உடல் பருமன் அதிகரிப்பதால் பல பிரச்சனைகளுக்கு ஆளாகிறோம். இதற்கு முக்கிய காரணம் உட்கொள்ளும் உணவுதான். எண்ணெய் மற்றும் இனிப்பு உணவுகளை அதிகமாக உட்கொள்வது உடல் எடையை அதிகரிக்கிறது.
தினசரி உண்ணும் சில உணவுகளை வைத்தே நாம் நம் உடல் எடையை எளிதாக குறைக்க முடியும். எடை இழப்பு உணவுகளில் வேர் காய்களும் (Root Vegetables) சேர்க்கப்பட்டுள்ளன.
இந்த காய்களில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் உள்ளன. அவை நம் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. பெரும்பாலும் இந்த வேர் காய்கறிகள் குளிர்காலத்தில் அதிகமாக விற்கப்படுகின்றன.
தற்போது குளிர் காலம் தொடங்கிவிட்டதால் இந்த சமயத்தில் இந்த காய்களை உங்கள் உணவில் சேர்த்து நன்மை பெறலாம்.
உடல் எடையைக் குறைப்பதைத் தவிர இந்த காய்களால் உடலுக்கு இன்னும் பல நன்மைகளும் கிடைக்கின்றன.
சர்க்கரைவள்ளி கிழங்கு
வைட்டமின் ஏ, சி மற்றும் நார்ச்சத்து நிறைந்த சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிட்டு வந்தால் உடல் எடை குறையும் (Weight Loss).
சர்க்கரைவள்ளி கிழங்கை சாப்பிடுவது எடை இழப்புக்கு உதவுவது மட்டுமல்லாமல் இரத்த சர்க்கரை அளவையும் கட்டுக்குள் வைத்திருக்கிறது.
இதை உட்கொண்டால் உடலுக்கு பல நன்மைகளை அளிக்கும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்களும் கிடைக்கின்றன.
கேரட்
உடலுக்கு நன்மை பயக்கும் காய்கறிகளில் கேரட்டுக்கு முக்கிய பங்குள்ளது. கேரட் ஒரு வேர்க் காயாகும்.
இது எடையைக் குறைப்பது மட்டுமல்லாமல், பார்வையை மேம்படுத்துவதோடு உடலின் நோய் எதிர்ப்பு சக்தியையும் அதிகரிக்கிறது.
இந்த சீசனில் கேரட் கறி, கேரட் கூட்டு, கேரட் கோஸ்மல்லி, அல்வா, பராந்தா ஆகியவற்றை செய்து சாப்ப்பிடுவது நமது உடல் ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கும்.
முள்ளங்கி
நார்ச்சத்து, ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் வைட்டமின் சி நிறைந்துள்ள முள்ளங்கியை எளிதில் உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.
முள்ளங்கி செரிமானத்தை நன்றாக வைத்திருக்கிறது. இதன் மூலம் இது உடல் எடையை குறைக்கவும், தொப்பை கொழுப்பை (Belly Fat) கரைக்கவும் உதவுகிறது.
இதை சாப்பிடுவது கல்லீரல் ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது.
நூக்கல்
நூக்கலை பல வழிகளில் சமைத்து உண்ணலாம். இது எடை இழப்பு டயட்டில் முக்கிய பங்கு வகிக்கும் ஒரு காயாகும். இதில் அதிக அளவு பொட்டாசியம் மற்றும் மாங்கனீஸ் ஆகியவை உள்ளன.
இது தவிர, நூக்கலில் வைட்டமின் சி, வைட்டமின் கே மற்றும் நார்ச்சத்து உள்ளன. நார்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது நல்ல செரிமானத்தை பராமரிக்கவும் எடையைக் குறைக்கவும் பயனுள்ளதாக இருக்கும்.
பீட்ரூட்
இரத்தத்தை அதிகரிக்க சிவப்பு பீட்ரூட் அடிக்கடி சாப்பிடப்படுகிறது.
ஆனால் எடையைக் குறைப்பதிலும் இதன் செயல்திறன் மிக அதிகம் என்பது பலருக்கு தெரிவதில்லை.
பீட்ரூட்டில் பல ஊட்டச்சத்துக்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. அவை ஆரோக்கியத்திற்கு நல்லது.
பீட்ரூட் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளின் நல்ல மூலமாகவும் உள்ளது.