ஈஸியா வெயிட் லாஸ் ஆகனுமா! விலை குறைந்த இந்த உணவுகளை ட்ரை பண்ணுங்க
உடல் எடையை குறைக்க வேண்டும் என்று, பலரும் கனவு காணுவர். இருப்பினும், அதற்கான முயற்சிகளை மேற்கொள்ளலாம் என்று அவர்களுக்கு பெரும்பாலான நேரங்களில் தோன்றாது.
இதற்கு காரணம், “வெயிட் குறைக்க வேண்டுமென்ரால் விலை அதிகமான உணவுகளை சாப்பிட வேண்டுமே” என்கிற தயக்கமாக இருக்கும். உண்மையில் வெயிட்டை குரைக்க சில மலிவான உணவுகளே உதவும். அவை என்னென்ன தெரியுமா?

என்னென்ன உணவுகள் தெரியுமா?
ஓட்ஸ்: ஓட்ஸில், ஃபைபர் சத்துகள் அதிகமாக இருக்கும். இதில் இருக்கும் Beta Glucan, ரத்தத்தில் இருக்கும் சர்க்கரை அளவை குறைத்து உங்களுக்கு அதிக நேரத்திற்கு பசி ஏற்படாமல் வைத்துக்கொள்ளும்.
பருப்பு வகை: பருப்பு வகை உணவுகளில் உடலுக்கு தேவையான அனைத்து புரதங்களும் இருப்பதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். அனைவரும் வாங்குவதற்கு ஏற்றார் போல, இது விலை மலிவாகவும் இருக்கிறது.

முட்டை: முட்டை, அனைவராலும் வாங்கக்கூடிய ஹெல்தியான உணவுகளுள் ஒன்று. இது, உங்களின் மெட்டபாலிசத்தை அதிகப்படுத்துவதோடு, பசியையும் குறைக்கும்.
தயிர் : புரதம் நிறைந்த உணவாக இருக்கும் இந்த உணவு, ப்ரோபயோடிக் உணவாக கருதப்படுகிறது. அதே போல இது Gut healthற்கும் நல்லது என்பது சுகாதார நிபுணர்களின் கூற்று.

வாழைப்பழம்: வாழைப்பழத்தில் ஃபைபர், பொட்டாசியம் மற்றும் எளிதில் செரிமானம் செய்யக்கூடிய சத்துகள் உள்ளன. அது மட்டுமன்றி, இது உங்களுக்கு பசி உணர்வையும் சில மணி நேரத்திற்கு ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும். இது, அனைவராலும் வாங்க்கூடிய உணவும் கூட.
சக்கரிவள்ளிக்கிழங்கு : அதிக புரதம் நிறைந்த இந்த உணவில், உடல் எடையை கூட்டாத வகையில் ஹை ஃபைபர் மற்றும் கார்போஹைட்ரேட்ஸ் உள்ளது. இது, அவ்வளவு எளிதில் பசி உணர்வையும் ஏற்படாமல் பார்த்துக்கொள்ளும்.