இரவு தூங்கும் முன் ஒரு டீஸ்பூன் ஜாதிக்காய் பொடி சாப்பிட்டால் இத்தனை நன்மைகளா?
ஜாதிக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளது. அதன் பொடியை தினமும் தூங்கும் முன் ஒரு கிளாஸ் நீர் அல்லது பாலில் கலந்து குடிப்பதால், பெண்களுக்கு கிடைக்கும் நன்மைகளை பற்றி விரிவாக காணலாம்.
ஆழ்ந்த தூக்கத்தைப் பெறலாம்
ஜாதிக்காயின் myricitrin போன்ற கலவை உள்ளன. அதன் sedative விளைவுகளை மனதை ரிலாஸ்டாக்கி தூக்கத்தரத்தை மேம்படுத்தும்
செரிமான ஆரோக்கியம்
ஜாதிக்காய் பாரம்பரியமாக செரிமான ஆரோக்கியத்தை மேம்படுத்த பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது வயிற்று அசௌகரியங்களை நீக்குவதோடு சீரான செரிமானத்திற்கு வழிவகுக்கக்கூடும்
அழற்சி எதிர்ப்பு பண்புகள்
ஜாதிக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளது. அவை உடலில் உண்டாகும் தேவையற்ற வீக்கத்தை போக்குவது மட்டுமின்றி சிறந்த தூக்க தரத்தை பெற உதவுகிறது
ஆன்டி ஆக்ஸிடன்ட்
ஜாதிக்காயின் ஆன்டி ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளன. இது ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை எதிர்த்துப் போராடுவதோடு ஒட்டுமொத்த உடல் ஆரோக்கியத்திற்கு உதவக்கூடும்
மனநிலை மேம்படும்
ஜாதிக்காயில் உள்ள சிவ சேர்மானங்கள் மனநிலையை மேம்படுத்தும் பண்புகளை கொண்டுள்ளது. அவற்றை தூங்கும் முன் உட்கொள்கையில், மன அழுத்தம் நீங்க நல்ல தூக்கத்தை பெற முடியும்