எலும்பு வலுவாக இருக்க இந்த 6 பழங்களில் ஒன்றை சாப்பிடுங்க போதும்
எலும்பு ஆரோக்கியத்தை பாதிக்கும் காரணிகளில் ஒன்று நிச்சயமாக வயது. வயதாகும்போது மக்கள் கவனிக்கும் முதல் மற்றும் முக்கிய சிக்கல்களில் ஒன்று பலவீனமான எலும்புகள்.
எனவே உணவில் பல்வேறு ஊட்டச்சத்துக்கள், குறிப்பாக எலும்புகளை வலுப்படுத்த உதவும் ஊட்டச்சத்துக்களை சேர்க்கத் தொடங்குவது மிகவும் முக்கியமானது.
ஆரோக்கியமான மற்றும் சமச்சீர் உணவின் ஒரு பகுதியாக, வலுவான எலும்புகளுக்கு தேவையான அனைத்தையும், முக்கியமாக கால்சியம் மற்றும் வைட்டமின் டி ஆகியவற்றை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கால்சியம் எலும்பு மற்றும் பற்களின் கட்டமைப்பை மேம்படுத்த உதவுகிறது, வைட்டமின் டி கால்சியத்தை உறிஞ்சுவதற்கு உடலுக்கு உதவுகிறது.
பொதுவாக எலும்புகளை வலுப்படுத்த அனைவரும் அசைவ உணவுகளை சார்ந்திருக்கின்றனர். ஆனால் அதிர்ஷ்டவசமாக சில சைவ உணவுகளும் எலும்புகளின் வலிமையை அதிகரிக்க உதவும் என்பது பலரும் அறியாதது.
ஆரஞ்சு
ஆரஞ்சு சாறு உடலுக்கு கால்சியம் மற்றும் வைட்டமின் டி இரண்டையும் வழங்குகிறது. இதன் மூலம் எலும்பு வலிமைக்கு பங்களிக்கிறது.
ஆரஞ்சு பழச்சாற்றை தொடர்ந்து உட்கொள்வது ஆஸ்டியோபோரோசிஸைத் தடுக்கும். ஆரஞ்சுடன் கேரட்டை சேர்த்து சாறு தயாரிப்பது கூடுதல் நன்மைகளை அளிக்கும்.
வாழைப்பழம்
வாழைப்பழம் உடலின் செரிமானத்திற்கு உதவுவதோடு மட்டுமல்லாமல், மெக்னீசியத்தின் சிறந்த மூலமாகும்.
எலும்பு மற்றும் பற்களின் அமைப்பு வளர்ச்சியில் ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே தினமும் ஒரு வாழைப்பழம் பலவீனமான எலும்புகளைத் தடுக்கிறது.
அன்னாசி
அன்னாசிப்பழம் உடலுக்கு நேரடியாக வைட்டமின் டி மற்றும் கால்சியத்தை வழங்காது.
மாறாக இது பொட்டாசியத்தின் மூலமாகும், இது உடலில் அமில சுமையை நடுநிலையாக்குகிறது மற்றும் கால்சியம் இழப்பைத் தடுக்கிறது.
இது வைட்டமின் ஏ இன் நல்ல மூலமாகவும் உள்ளது.
ஸ்ட்ராபெர்ரி
ஸ்ட்ராபெர்ரி பல ஆரோக்கிய நன்மைகளை அளிக்கிறது.
அவை கால்சியம், மாங்கனீஸ், பொட்டாசியம், வைட்டமின் கே மற்றும் வைட்டமின் சி போன்ற ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளன.
இது எலும்பு கட்டமைப்பை உருவாக்க உதவுகிறது. பப்பாளி இந்த வெப்பமண்டல பழத்தில் அதிக அளவு கால்சியம் உள்ளது.
100 கிராம் பப்பாளியில் 20 மி.கி கால்சியம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதை உங்கள் வழக்கமான உணவின் ஒரு பகுதியாக மாற்றிக்கொள்ளுங்கள்.
கிவி
கிவி பழம் அல்லது பழச்சாறில் அதிக அளவு கால்சியம் உள்ளது, ஒரு கிவி பழத்தில் கிட்டத்தட்ட 60 மி.கி கால்சியம் உள்ளது.
இது எலும்பின் வலிமையையும், பற்களின் அமைப்பையும் வளர்க்க உதவுகிறது மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் தடுக்கிறது