வயலுக்கு சென்ற தாய்க்கும் மகளுக்கும் நடந்தேறிய பெரும் துயரம் ; துடிதுடித்து பிரிந்த உயிர்கள்
குருநாகல் - மஹாவ பகுதியில் பயிர்களுக்கு பூச்சிக்கொல்லி மருந்து தெளிக்கச் சென்ற தாயும் மகளும் யானையின் தாக்குதலுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளனர்.
இச் சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது. மஹாவ, நிகவலயாய மதியாவ பகுதியை சேர்ந்த 28 வயதான மகளும் 53 வயதுடைய அவரது தாயார் ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

சுற்றித் திரியும் காட்டு யானைகள்
தாக்குதலுக்குள்ளான மகளையும் தாயையும் அப் பகுதி மக்கள் அம்பன்பொல வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். எனினும் மகள் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
பலத்த காயமடைந்த தாய், மேலதிக சிகிச்சைக்காக குருநாகல் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த தாயார் அம்பன்பொல பிரதேச செயலகத்தின் முகாமை சேவைகள் அதிகாரியாக செயற்பட்டுள்ளார்.
காட்டு யானைகள் தொடர்ந்து அந்தப் பகுதிகளில் சுற்றித் திரிவதாகவும் கிராம மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        