வெறும் வயிற்றில் முந்திரி சாப்பிடுபவர்களாக நீங்கள்? உங்களுக்கான எச்சரிக்கை தகவல்
முந்திரி பருப்பை சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு மிக நன்மை பயக்கும் என்று கூறப்படுகின்றது. முந்திரியில் மெக்னீசியம், பொட்டாசியம், தாமிரம், துத்தநாகம், இரும்பு, மாங்கனீசு மற்றும் செலினியம் போன்ற தாதுக்கள் இதில் உள்ளது.
மேலும், முந்திரி பருப்பில் வைட்டமின் ஈ அதிகளவில் இதில் நிறைந்துள்ளது, ஆனால் சில உடல்நலப் பிரச்சினைகளில், நீங்கள் முந்திரி உட்கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
இதேவேளை, வெறும் வயிற்றில் அதிக முந்திரி சாப்பிட்டால் என்ன விளைவு ஏற்படும் என்று பார்ப்போம்.
உயர் இரத்த அழுத்த பிரச்சனை: முந்திரி பருப்பில் சோடியம் உள்ளது. இதை அதிகமாக சாப்பிட்டால், உடலில் சோடியத்தின் அளவை அதிகரிக்கலாம். உயர் இரத்த அழுத்தம் பிரச்சனையில், சோடியம் அளவு அதிகரிப்பது உங்கள் பிரச்சனையை மேலும் அதிகரிக்கும்.
வாயு பிரச்சனை: முந்திரி பருப்பில் நார்ச்சத்து உள்ளது. இதனை அதிக அளவு மற்றும் வெறும் வயிற்றில் சாப்பிடுவதால் உடலில் நார்ச்சத்து அதிகரிக்கிறது. இதனால் வாயு பிரச்சனை ஏற்படும்.
சிறுநீரக தொடர்பான பிரச்சனை: முந்திரி பருப்பில் பொட்டாசியம் உள்ளது. சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால், உடலில் பொட்டாசியத்தின் அளவை அதிகரிப்பது நோயை மேலும் அதிகரிக்கும். சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகளில் முந்திரியை அதிகமாக உட்கொள்ள வேண்டாம். ஒரு நபர் ஒரு நாளைக்கு 4 முதல் 5 முந்திரி சாப்பிடலாம்.