உயிர்த்த ஞாயிறு தாக்குதல்; தீர்ப்பு அறிவிப்பு; 9 பேர் முற்றாக விடுதலை
உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் தொடர்பான வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இந்த 24 பேரில் 15 பேருக்கு எதிராக குற்றங்கள் நிரூபிக்கப்பட்டுள்ளன 9 பேர் முற்றாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சஹ்ரான் ஹாஷிம் உட்பட எட்டு தற்கொலைத்தாக்குதல் நடத்தியவர்களுக்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த குற்றச்சாட்டில் நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் மீது 23,270 குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டன.

ஈஸ்டர் தாக்குதலின் பிரதான சூத்திரதாரி நவுஃபர் மௌலவி; 15 பேர் குற்றவாளி 9 பேர் விடுதலை; நீதிமன்றம் அறிவிப்பு!
மேல் நீதிமன்ற நீதிபதி (தலைவர்) நவரத்ன மாரசிங்க, சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகிய மூன்று நீதிபதிகள் கொண்ட கொழும்பு மேல் நீதிமன்றத்தின் சிறப்பு நீதிபதிகளின் முன்னிலையில் தீர்ப்பு தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது.
இந்த தீர்ப்பின் தமிழ் மொழிபெயர்ப்பும் உயர் நீதிமன்ற மொழிபெயர்ப்பாளரால் நீதிமன்றத்தில் வாசிக்கப்பட்டு வருகின்றது.
வழக்கு தொடர்பான மேலதிக சட்ட நடவடிக்கைகள் மற்றும் தண்டனை தொடர்பான விபரங்கள் நீதிமன்ற அறிவிப்புகளின் அடிப்படையில் வெளியாகவுள்ளன.

தீர்ப்பு அறிவிக்கப்பட்டதை முன்னிட்டு அசம்பாவிதங்களைத் தவிர்க்க புதுக்கடை நீதிமன்ற வளாகத்தைச் சுற்றி பல விசேட பொலிஸ் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டுப் பலத்த பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
முதலாம் இணைப்பு
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று (22) நண்பகல் 12.27 க்கு கொழும்பு மேல் நீதிமன்றத்தில் விசேட நீதிபதிகள் ஆயம் முன்னிலையில் ஆரம்பமானது.
மகொழும்பு விசேட மேல் நீதிமன்ற நீதிபதிகளான நவரத்ன மாரசிங்க (தலைவர்), சுஜீவ நிஸ்ஸங்க மற்றும் இராமநாதன் கண்ணன் ஆகியோர் அடங்கிய மூவர் நீதிபதிகள் ஆயம் முன்னிலையிலேயே இந்தத் தீர்ப்பு அறிவிக்கப்பட்டு வருகிறது.

24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் வழக்குத் தாக்கல்
இதன்போது, நீதிமன்றத்தினால் பிரதிவாதிகளுக்கு எதிராக 16 குற்றச்சாட்டுகள் வாசித்துக் காட்டப்பட்டன.
அதனைத் தொடர்ந்து, பிரதிவாதிகளுக்கு மதிய உணவு இடைவேளை வழங்கப்பட வேண்டியிருந்ததால், வழக்கின் தீர்ப்பை அறிவிக்கும் நடவடிக்கை இன்று (22) பிற்பகல் 1.45 வரை ஒத்திவைக்கப்பட்டது.
சஹ்ரான் ஹாஷிம் உள்ளிட்ட 8 குண்டுதாரிகளுக்குத் துணைபுரிந்தமை, சதித்திட்டம் தீட்டியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் நௌஃபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகளுக்கு எதிராகச் சட்டமா அதிபரால் இந்த வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.