வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்த நபர்; பெண் மருத்துவர் பாலியல் சம்பவம்
கல்நேவ நகரில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கெக்கிராவ நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கல்நேவ நகரில் உள்ள ஒரு வீட்டில் அத்துமீறி நுழைந்து அநாகரிகமாக நடந்துகொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில், சந்தேக நபர் நேற்று இரவு (06) கல்நேவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

அனுராதபுர வைத்தியசாலையில் பெண் மருத்துவர் பாலியல் சம்பவம்
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை, கல்நேவவைச் சேர்ந்த சுமார் 35 வயதுடைய மதுரங்க ரத்நாயக்க என்ற 'பண்ட்டி' என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.
அனுராதபுர வைத்தியசாலையில் பெண் மருத்துவர் ஒருவர் பாலியல் ரீதியாகத் துன்புறுத்தப்பட்டதாகக் கூறப்படும் சம்பவத்திலும் இவரே முக்கிய சந்தேக நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பாம்பு புகுந்துவிட்டதாகக் கூறி வீட்டுக்குள் நுழைந்து பாலியல் துன்புறுத்தல் ; அதிர்ச்சிகரமான சம்பவம்!
மேலும், கடந்த காலங்களில் பல குற்றங்கள் தொடர்பாக இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
குளியலறையில் உள்ள ஜன்னல் வழியாக சந்தேக நபர் வீட்டிற்குள் நுழைந்து, அங்கு இருந்த ஆடைகளை அணிந்து, அநாகரிகமாக நடந்துகொண்டதை சிசிரிவி காட்சிகள் காட்டுகின்றன.
பின்னர் அவர் வீட்டின் முன் கதவைத் திறந்துவிட்டுச் சென்றதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக கல்நேவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.