தீபாவளியில் எண்ணெய் குளியல் முதல் லட்சுமி பூஜை வரையான உகந்த நேரங்கள்
இம்முறை தீபாவளிப் பண்டிகை நாளை (நவம்பர் 8) ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படவுள்ள நிலையில், எண்ணெய் குளியல் மற்றும் பூஜைகளை மேற்கொள்வதற்கான உகந்த நேரங்கள் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளன.
எண்ணெய் குளியலுக்கான உகந்த நேரம் தீபாவளி தினத்தன்று அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்னர் எண்ணெய் தேய்த்துக் குளிப்பது சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

இதற்கமைய, அதிகாலை 4.00 மணி முதல் காலை 6.00 மணி வரையிலும் அல்லது அதிகாலை 4.30 மணி முதல் காலை 6.06 மணி வரையிலும் எண்ணெய் குளியல் மேற்கொள்ள உகந்த நேரமாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
காலை பூஜைக்கான உகந்த நேரம் தீபாவளி தினத்தன்று காலை பூஜை மற்றும் நிவேதனம் செய்வதற்கு காலை 7.45 மணி முதல் 8.45 மணி வரையிலான நேரம் உகந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லட்சுமி பூஜைக்கான உகந்த நேரம் செல்வ வளம் மற்றும் குடும்ப நலன் வேண்டி மேற்கொள்ளப்படும் லட்சுமி பூஜை மற்றும் லட்சுமி குபேர பூஜைகளை மாலை 6.07 மணி முதல் இரவு 8.09 மணி வரையிலான நேரத்தில் மேற்கொள்ளலாம் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அனைவருக்கும் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்