உயிர்த்த ஞாயிறு தாக்குதல் ; அறவிடப்பட்ட நிதி விபரம்
இலங்கையில் கடந்த 2019 ஏப்ரல் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்களைத் தடுக்க நடவடிக்கை எடுக்கத் தவறியமை குறித்து தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுக்கள் தொடர்பில் வழங்கப்பட்ட உத்தரவுக்கு அமைவாக, அறவிடப்பட்ட நிதியிலிருந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு 245 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை சட்டமா அதிபர் இன்று (27) உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தார்.
இழப்பீடு வழங்குவதை கண்காணிக்க 12 தொடர்புடைய மனுக்கள் இன்று தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, நீதிபதிகளான எஸ்.துரைராஜா மற்றும் ஏ.எச்.எம். டி. நவாஸ் ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. குறித்த சந்தர்பபத்திலேயே மேற்படி அறிவிப்பு நீதிமன்றில் வெளியிடப்பட்டது .