மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம்; அதிர்ச்சியில் மக்கள்
மியன்மாரில் இன்று மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக வௌிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மியன்மாரின் இரண்டாவது பெரிய நகரான மண்டலேயில் 5.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க நிலநடுக்கவியல் மையம் அறிவித்துள்ளது.
இதுவரை, 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழப்பு
கடந்த வெள்ளிக்கிழமை மியன்மாரில் ஏற்பட்ட பேரழிவு தரும் நிலநடுக்கத்தைத் தொடர்ந்து ஏற்பட்ட தொடர்ச்சியான நிலநடுக்கங்களில் இதுவும் ஒன்றாகும்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து மண்டலேயின் வீதிகளில் மக்கள் குவிந்ததாக தெரிவிக்கப்படுகிறது. முன்னதாக கடந்த வெள்ளிக்கிழமை (28) மியன்மாரில் ஏற்பட்ட 7.7 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தால் ஏராளமான கட்டிடங்கள் இடிந்து விழுந்து பல உட்கட்டமைப்புகள் சேதமடைந்தன.
இதுவரை, 1,600 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 3,400க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் வௌிநாட்டு செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன
. நிலநடுக்கத்தால் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படும் நிலையில் மற்றொரு நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமை அந்நாட்டு மக்களை மேலும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது.