உலகை உலுக்கிய பூகம்பம்; உயிருடன் மீட்கப்பட்ட குடும்பத்தால் ஆரவாரம்!
உலகை உலுக்கிய துருக்கி , சிரியா பூகம்பத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 11 ஆயிரத்தை கடந்துள்ளது. அதேவேளை துருக்கி சிரியாவில் பூகம்பத்தினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11200 ஆக அதிகரித்துள்ளது.
அதேசமயம் சிரியாவில் பூகம்பத்தினால் சரிந்த கட்டிடங்களுக்கு இடையே ஒரு குடும்பமே மீட்கப்பட்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து சிரிய பாதுகாப்புப் படையினர் கூறுகையில்,
மக்கள் ஆரவாரம்
“வடக்கு இட்லிப் பகுதியில் உள்ள பிஸ்னியா கிராமத்தில் பூகம்பத்தினால் சரிந்த கட்டிங்களுக்கு இடையே ஒரே குடும்பத்தை சேர்ந்த சிறுவர், சிறுமியர், பெரியவர்கள் என அனைவரும் மீட்கப்பட்டனர்” என்று தெரிவித்தனர்.
இந்நிலையில் பாதுகாப்புப் படையினரால் அந்தக் குடும்பத்தினர் மீட்கப்படும்போது சுற்றி இருந்த மக்கள் ஆரவாரம் குரல் எழுப்பி வரவேற்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி உள்ளன.