அதிகாலையில் 23 வயது இளைஞரின் உயிரை பறித்த சம்பவம் ; தீவிரமாகும் விசாரணை
கண்டி - பேராதனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கன்னொருவ - கடுகஸ்தொட்ட வீதியில் திங்கட்கிழமை (01) அதிகாலை இடம்பெற்ற வீதி விபத்தில் மோட்டார் சைக்கிள் சாரதி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கன்னொருவ - கடுகஸ்தொட்ட வீதியில் பேராதனை நோக்கி பயணித்த லொறி ஒன்றுடன், அதற்கு எதிர்த்திசையில் வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளது.

மேலதிக விசாரணை
விபத்தில் காயமடைந்த மோட்டார் சைக்கிள் சாரதி பேராதனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்த விபத்தில் உயிரிழந்தவர் யட்டியந்தொட்ட பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
1½ வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள் ; உடைக்கப்பட்ட கைகள் ; காதலனுடன் பெற்ற தாய் செய்த பெரும் கொடூரம்
விபத்துக்குள்ளான லொறியின் சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளில் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.