வாடகை கார் ஓட்டுநரிடம் கொள்ளையிட்டவருக்கு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு
வாடகைப் பயணம் செல்வதாகக் கூறி, பிரபல வாடகை வாகன சேவை நிறுவனம் ஒன்றின் காரில் ஏறி, அதன் ஓட்டுநரிடம் கொள்ளையடித்த சம்பவம் தொடர்பாகக் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒருவரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
வெலிக்கடை பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இந்த சந்தேகநபர், நேற்று (01) கொழும்பு மேலதிக நீதவான் நுவான் கௌஷல்ய முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

அடையாள அணிவகுப்பு
இந்தச் சம்பவம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகள் மேலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
சம்பவம் குறித்து மேலும் இரண்டு சந்தேகநபர்களைக் கைது செய்வதற்கான விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் பொலிஸார் இதன்போது குறிப்பிட்டுள்ளனர்.
1½ வயது குழந்தையின் உடலில் 91 காயங்கள் ; உடைக்கப்பட்ட கைகள் ; காதலனுடன் பெற்ற தாய் செய்த பெரும் கொடூரம்
அதன்படி, சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும், அவரை அடையாள அணிவகுப்பு ஒன்றில் ஆஜர்படுத்துவதற்கான உத்தரவைப் பிறப்பிக்குமாறும் பொலிஸார் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தனர்.
அந்தக் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், சந்தேகநபரை எதிர்வரும் 09 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டதுடன், அன்றைய தினம் அவரை அடையாள அணிவகுப்பிற்கு ஆஜர்படுத்துமாறும் உத்தரவிட்டார்.