அடுத்த மூன்று மாதங்களில் நடைமுறைக்கு வரவிருக்கும் e-Motoring முறை
மோட்டார் வாகனங்கள் தொடர்பான சேவைகளில் தானியங்கி முறையில் இயங்கும் e-Motoring முறையானது அடுத்த மூன்று மாதங்களில் நடைமுறைப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போக்குவரத்து அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இ-மோட்டரிங் அமைப்பு தொடங்கப்பட்டவுடன் அனைத்து வாகனப் பதிவுகளும் ஒன்லைனில் செய்யப்படவுள்ளது.
இந்த அமைப்பு வாகனப் பதிவுகளை எளிமையாக்குவதற்கும், செயல்திறனை மேம்படுத்துவதற்கும், மோசடிகளைக் குறைப்பதற்கும் வாகன உரிமையாளர்கள், காப்புறுதி நிறுவனங்கள், குத்தகை நிறுவனங்கள் மற்றும் மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இலங்கை சுங்கம், இறக்குமதி மற்றும் ஏற்றுமதி முகவர்கள் போன்ற தொடர்புடைய அரச திணைக்களங்களை டிஜிட்டல் முறையில் இணைக்கும். இம்முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் இருந்தும் பல்வேறு காரணங்களால் செயற்படுத்தப்படவில்லை.
2017 ஆம் ஆண்டு இந்த முறைமை நடைமுறைப்படுத்தப்படவிருந்த போதிலும் சில பிரிவினரின் எதிர்ப்பின் காரணமாக அது இன்னும் முன்மொழிவாகவே இருப்பதாக பந்துல குணவர்தன குறிப்பிட்டுள்ளார்.
எத்தகைய எதிர்ப்பையும் பொருட்படுத்தாது, எதிர்வரும் மூன்று மாதங்களில் மோட்டார் போக்குவரத்து திணைக்களம் தன்னியக்கமாக்கப்படுவதை உறுதி செய்வதாகவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.