அறுவை சிகிச்சையின் போது போதையில் வைத்தியரும் மருமகனும் செய்த செயலால் பெண்ணுக்கு நேர்ந்த அவலம்
உத்தரப் பிரதேச மாநிலம் பாராபங்கியில், சட்டவிரோதமாக கிளினிக் நடத்திய உரிமையாளரும் அவரது மருமகனும் யூடியூப் வீடியோவை பார்த்து அறுவை சிகிச்சை செய்ததில், நோயாளி பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கல் அடைப்பு நோயால் அவதிப்பட்டு வந்த பெண் ஒரு கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு, கிளினிக் நடத்துனர் அறுவை சிகிச்சைக்காக ரூ.25,000 செலவாகும் என்று கூறி, ரூ.20,000 முன்பணம் பெற்றுள்ளார்.

மது போதை
அறுவை சிகிச்சையின் போது வைத்தியர் மது போதையில் இருந்ததாகவும், யூடியூப் வீடியோ பார்த்துவிட்டு சிகிச்சையை தொடங்கியதாகவும் பெண்ணின் கணவர் புகார் அளித்துள்ளார்.
அறுவை சிகிச்சையின் போது ஆழமான கீறலை ஏற்படுத்தி, ரத்த நாளங்களை வெட்டியதால், குறித்த பெண் அடுத்த நாள் உயிரிழந்துள்ளார்.
இதன் பின்னர் சட்டவிரோதக் கிளினிக் சீல் வைக்கப்பட்டுள்ளதுடன், அலட்சியத்தால் மரணம் ஏற்படுத்துதல் மற்றும் எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வைத்தியர், அவருக்கு உதவிய மருமகன் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.